Paristamil Navigation Paristamil advert login

வெளிநாட்டு விமான நிலையத்தில் இலங்கையர் கைது

வெளிநாட்டு விமான நிலையத்தில் இலங்கையர் கைது

1 ஆவணி 2023 செவ்வாய் 14:07 | பார்வைகள் : 7532


இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை பிரஜை ஒருவர் விமான நிலைய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

10 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை கட்டாருக்கு கொண்டு செல்ல முயன்ற இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

டோஹா செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் பயணிகளின் பயணப்பொதிகளை பரிசோதித்த போது இந்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகம் காரணமாக பையை சோதனையிட்ட போது இந்த பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பையில் கண்டெடுக்கப்பட்ட 10.294 கிலோ ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், சந்தேக நபரான இலங்கையரை அதிகாரிகள் கைது செய்தனர்.

சந்தேகத்திற்குரிய இலங்கையர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அந்த நாட்டின் போதைப்பொருள் தடுப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்ட மற்ற நபர்களின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்