Paristamil Navigation Paristamil advert login

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

12 மாசி 2024 திங்கள் 14:55 | பார்வைகள் : 3070


கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று(12) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 308 ரூபாய் 19 சதமாக பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 308 ரூபாய் 31 சதமாக காணப்பட்டது.

அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 317 ரூபாய் 82 சதமாக பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 318 ரூபா 23 சதமாக காணப்பட்டது.


 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்