Paristamil Navigation Paristamil advert login

கொழும்பு மக்களுக்கு முக்கிய தகவல்!

கொழும்பு மக்களுக்கு முக்கிய தகவல்!

15 ஆடி 2023 சனி 02:31 | பார்வைகள் : 4777


கொழும்பின் பல இடங்களில் இன்றைய தினம் 14 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று காலை 8 மணி முதல் இரவு 10 வரை இந்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 01 முதல் 04 வரையிலான பகுதிகளிலும், கொழும்பு 07 முதல் 15 வரையான பகுதிகளிலும் இந்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மாளிகாகந்த மற்றும் எலிஹவுஸ் நீர் வளாகங்களுக்கு நீரை விநியோகிக்கும் குழாயில் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப்பணிகள் காரணமாகவே நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்