Paristamil Navigation Paristamil advert login

முற்றாக தடைப்பட்டது 14ம் இலக்க மெட்ரோ தொடரூந்து சேவைகள்.

முற்றாக தடைப்பட்டது 14ம் இலக்க மெட்ரோ தொடரூந்து சேவைகள்.

12 மாசி 2024 திங்கள் 16:07 | பார்வைகள் : 3110


கடைசியாக 14 டிசம்பர் 2020 முதல் தன் பயணப் பாதையை  Mairie de Saint - uoen முதல் Olympiades வரை நீடித்துக் கொண்ட 14ம் இலக்க தொடரூந்து சேவைகள். கடந்த ஞாயிற்றுக்கிழமை 11/02 முதல் எதிர்வரும் 25/02 வரை தனது சேவைகளை முற்றாக பயணிகளின் பாவனைக்கு மூடிக் கொள்கிறது.

பிரான்சில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போது பயணிகளின் பாவனைக்கு பல போக்குவரத்து  சேவைகள் விரிவாக்கப்படுவது போல் குறித்த சேவையும் விரிவாக்கப்பட உள்ளது.   
இதனால் 11/02 முதல் 25/02 வரை முழுமையாக மூடப்பட்டு சேவைகள் பின்னர் 28/03 முதல் யூன் மாதம் வரை சனி, ஞாயிறு தினங்களிலும், கிழமை நாட்களில் இரவு 22:00க்கு பின்னரும் தன் சேவைகளை பயணிகளின் பாவனைக்கு மூடவுள்ளது.

14ம் இலக்க மெட்ரோ தொடரூந்து சேவையானது வரும் கோடைக் காலம் முதல் தெற்கே d'Orly விமான நிலையத்தில் இருந்து முதல் வடக்கே Saint - Denis வரை தன் தானியங்கி தொடரூந்து சேவையை நீடிக்கவுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்