ஒரு வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலை துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி அமைச்சர் Nicole Belloubet
12 மாசி 2024 திங்கள் 16:56 | பார்வைகள் : 4425
புதிய கல்வி அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட Nicole Belloubet இன்று மேற்குறிப்பிட்ட தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த 2023ல் வெளியான தரவுகளின் படி CE2 முதல் CM2 வரையிலான மாணவர்களில் 5% சதவீதமானவர்களும், நடுநிலைப் கல்வி மாணவர்களில் 6% சதவீதமானவர்களும் மற்றும் உயர்நிலைப் பாடசாலை மாணவர்களில் 4% சதவீதமானவர்களும் பாடசாலை துன்புறுத்தலுக்கு ஆளாகிவருவதாக குறிப்பிட்டு இருப்பதை சுட்டிக் காட்டிய அமைச்சர் இன்று நிலமை, ஒரு வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலை துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
சுமார் 17.000 கேள்வித்தாள் பிரதிகள் மூலம் CE2 மாணவர்கள் முதல் இறுதியாண்டு மாணவர்கள் வரையான 7.5 மில்லியன் மாணவர்களிடம் எடுக்கப்பட்ட தரவுகளே மேற்குறிப்பிட்ட முடிவைத் தந்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையை கட்டுப்படுத்த, தொடர்ச்சியாக மாணவர்களுக்கிடையில் விழிப்புணர்வு பாடங்களை முன்னெடுத்தல், தீவிரமான பாடசாலை துன்புறுத்தல்களில் ஈடுபடும் மாணவர்களின் செல்போன்களைப் பறிமுதல் செய்தல், சமூக வலைப்பின்னல்களில் மாணவர்களைத் துன்புறுத்துபவர்களை பாடசாலையில் தொடர்ந்து கல்வி கற்பதை நிறுத்துதல் போன்ற நடவடிக்கைகளை அரசு முன் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேற்குறிப்பிட்ட கணக்கெடுப்புகள் மாணவர்களு கிடையே ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் எனவும் அதன் அடிப்படையில் மேலும் சட்டங்கள் இறுக்கமாக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.