மைதானத்தில் மின்னல் தாக்கி கால்பந்து வீரர் மரணம்...
13 மாசி 2024 செவ்வாய் 08:40 | பார்வைகள் : 2309
கால்பந்து போட்டியின் போது மைதானத்தின் நடுவே மின்னல் தாக்கி வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள கிளப்புக்கான போட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே மைதானத்தில் மின்னல் தாக்கி இந்தோனேசியா வீரர் உயிரிழந்தார். இரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின் போது வீரர் மீது மின்னல் விழுந்தது.
அப்போது சக வீரர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அவர் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார் என்று ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மின்னல் தாக்கி உயிரிழந்த இந்தோனேசிய கால்பந்து வீரர் செப்டைன் ரஹர்ஜா (35) ஆவார்.
இந்த சம்பவமானது கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி 2 FLO FC பாண்டுங் மற்றும் FBI சுபாங் இடையேயான போட்டியானது மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி ஸ்டேடியத்தில் நடந்தது.
கால்பந்து வீரரின் மரணத்திற்கு ரசிகர்கள் மற்றும் சிங்கப்பூரில் உள்ள உள்ளூர் வீரர்கள், பயிற்சியாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதுமாதிரியான சம்பவம் சிங்கப்பூரில் நடப்பது முதல்முறையல்ல.
கடந்த 2023 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சோராடின் U-13 கோப்பை போட்டியின் போது காயோ ஹெம்ரிக் என்ற 21 வயது கால்பந்து வீரருக்கு மின்னல் தாக்கி மாரடைப்பு ஏற்பட்டது.
பின்னர், அவரை சக வீரர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து சுய நினைவுக்கு திரும்பினார்.