இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்- 50 பாலஸ்தீனர்கள் பலி
13 மாசி 2024 செவ்வாய் 09:21 | பார்வைகள் : 2581
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயா போர் 4 மாதங்களாக நீடித்து வருகின்றது.
இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,422-ஆக அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை சுமார் 65,087 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது.
இதில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசாவில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என இஸ்ரேல் இதனை பிரகடனப்படுத்தினாலும், இதில் பெரும்பாலும் உயிரிழந்து வருவது சாமானிய பொதுமக்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது. அவர்களை அடியோடு ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் அரசும் அறிவித்தது.
தொடர்ந்து தாக்குதலை மற்றும் பயங்கரவாதிகளை தேடும் பணியை தீவிரப்படுத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டு உள்ளார்.
ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போரானது நான்கு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.
காசாவில் உள்ள 23 லட்சம் பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் ராணுவ ஆக்கிரமிப்பால் எகிப்து எல்லையையொட்டிய பகுதிக்கு புலம்பெயர்ந்து சென்றனர்.
இந்நிலையில் பணயகைதிகளை மீட்கும் நடவடிக்கையாக ரபா நகரில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 50 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளதாக தெற்கு காசா நகரமான ரபாவில் உள்ள மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையில் 2 பணயக்கைதிகளை மீட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.