Paristamil Navigation Paristamil advert login

நேட்டோவிலிருந்து அமெரிக்கா வெளியேற்றப்படும்...?  முன்னாள் ஆலோசகர்கள் கருத்து

நேட்டோவிலிருந்து அமெரிக்கா வெளியேற்றப்படும்...?  முன்னாள் ஆலோசகர்கள் கருத்து

13 மாசி 2024 செவ்வாய் 09:48 | பார்வைகள் : 2466


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றால் அவர் அமெரிக்காவை நேட்டோவிலிருந்து விலக்குவார் என டிரம்பின் முன்னாள்  ஆலோசகர்கள்  தெரிவித்துள்ளார்.

நேட்டோ அமைப்பின் வரவுசெலவுதிட்டத்திற்கு நிதி வழங்காத  உறுப்பு நாடுகளிற்கு எதிராக ரஷ்யா தாக்குதலை மேற்கொள்ளவேண்டும் என்ற டிரம்பின் கருத்தினால் அமெரிக்காவில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

 அதேவேளை மீண்டும் ஜனாதிபதியானால் டிரம்ப் நேட்டோவிலிருந்து அமெரிக்காவை விலக்கிக்கொள்வார் எனமார்ச் மாதம்  வெளியாகவுள்ள நூலில் டிரம்பின் முன்னாள் ஆலோசகர்கள்  தெரிவித்துள்ளனர்.

வல்லரசுகளின் மீள்வருகை the return of great powers

என்ற தனது நூலில் டிரம்ப் மற்றும் பைடன் நிர்வாகத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றிய ஒருவர் இதனை தெரிவித்துள்ளார் என சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

டிரம்ப் பைடனை தோற்கடித்தால் அமெரிக்கா நேட்டோவிலிருந்து வெளியேற்றப்படும் என அவர் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.

நேட்டோ உண்மையான நெருக்கடிக்குள் தள்ளப்படும் என ஜோன்பொல்டன் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் நேட்டோவிலிருந்து வெளியேற முயல்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேட்டோவை ஒரு பயனுள்ள அர்த்தமுள்ள விடயமாக டிரம்ப் கருதவில்லை என டிரம்பின் வெள்ளை மாளிகை பிரதானியாக பணியாற்றிய ஒய்வுபெற்ற ஜெனரல் ஜோன்கெலி அந்த நூலில் தெரிவித்துள்ளார்.

டிரம்ப்  தென்கொரியாவிலும் ஜப்பானிலும் அமெரிக்க படையினரை நிலைகொள்ளச்செய்திருப்பதை கடுமையாக எதிர்க்கின்றார் என தெரிவித்துள்ள ஜோன்கெலி விளாடிமிர் புட்டினும் கிம்ஜொங் அன்னும் சரியான நபர்கள் என டிரம்ப் கருதினார் எனவும் குறிப்பிட்டுள்ளார்

வடகொரியாவை அமெரிக்காவே தனிமைப்படுத்திவிட்டது என டிரம்ப் கருதினார் எனவும் கெலி அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்