Paristamil Navigation Paristamil advert login

பிரட் குலாப் ஜாமூன்

பிரட் குலாப் ஜாமூன்

13 மாசி 2024 செவ்வாய் 10:33 | பார்வைகள் : 1894


குலாப் ஜாமூன் இந்தியாவின் மிகவும் பிரபலமான இனிப்புகளில் ஒன்றாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். பொதுவாக கடைகளில் கிடைக்கும் குலாப் ஜாமூன் மிக்ஸ் பயன்படுத்தி குலாப் ஜாமூன் தயாரிக்கப்படுகிறது.

ஆனால் இன்று நாம் பார்க்கப்போகும் ரெசிபியானது பிரட் வைத்து எவ்வாறு அனைவருக்கும் பிடித்த சுவையில் குலாப் ஜாமூன் செய்யலாம் என்று தான். வாங்க பார்க்கலாம்…

தேவையான பொருட்கள் :

பிரட்

சர்க்கரை - 1 கப்

பால் பவுடர் - 1/3 கப்

பால் - 5 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் - 3

எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

பேக்கிங் பவுடர் - 1 பின்ச்

எண்ணெய் - தேவைக்கேற்ப

தண்ணீர் - 1 கப்

செய்முறை :

கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரை சேர்த்து அதனுடன் ஏலக்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு அதை கொதிக்க வைத்துக்கொள்ளவும்.

7 நிமிடங்களுக்கு பிறகு ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைத்து அதை தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அடுத்து பிரட் துண்டுகளை எடுத்து அதன் நாலாபக்கமும் உள்ள பிரவுன் கலரை வெட்டி நீக்கி கொள்ளவும்.

பிறகு அந்த வெள்ளை பிரட்களை துண்டு துண்டாக பிய்த்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அந்த பிரட் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

தற்போது அந்த பிரட் தூள்களுடன் பால் பவுடர் மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்