Paristamil Navigation Paristamil advert login

இலங்கை கைப்பேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை கைப்பேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

13 மாசி 2024 செவ்வாய் 15:07 | பார்வைகள் : 5877


கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பதிரண இன்றைய தினம் செவாய்க்கிழமை இதனை தெரிவித்துள்ளார்.

நீங்கள் தற்போது பயன்படுத்தாத தொலைபேசி நிறுவனங்களில், உங்கள் பெயரில் உள்ள சிம் அட்டை பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க தொலைபேசி நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம். 

அதேவேளை உங்கள் தேசிய அடையாள அட்டை எண்ணின் கீழ் உங்களுக்குத் தெரியாமல் சிம் அட்டைகள் வழங்கப்பட்டிருந்தால், அவற்றின் இணைப்பைத் துண்டிப்பது மிகவும் முக்கியம் என தெரிவித்தார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்