Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க டொலரின் பெறமதி அதிகரிப்பு - இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

அமெரிக்க டொலரின் பெறமதி அதிகரிப்பு - இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

13 மாசி 2024 செவ்வாய் 15:41 | பார்வைகள் : 1584


நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (13) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 308 ரூபாய் 58 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 308 ரூபாய் 19 சதமாக காணப்பட்டது.

 அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 318 ரூபாய் 46 சதமாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 317 ரூபாய் 82 சதமாக காணப்பட்டது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்