Paristamil Navigation Paristamil advert login

ஓட்டுனர் உரிமத்தை விட்டுச் சென்றால் கவலையில்லை! - இன்று முதல் புதிய சட்டம்!

ஓட்டுனர் உரிமத்தை விட்டுச் சென்றால் கவலையில்லை! - இன்று முதல் புதிய சட்டம்!

14 மாசி 2024 புதன் 07:00 | பார்வைகள் : 10481


இன்று பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் பிரான்சில் புதிய சட்டம் நடைமுறைக்கு வருகிறது. உங்களது ஓட்டுனர் உரிமத்தை (permis ) மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டுச் சென்றால், நீங்கள் அது குறித்து கவலைப்படத்தேவையில்லை. உங்களுடைய அடையாள அட்டையிலேயே (l'application France Identité)  அது குறித்த தகவல்கள் உள்ளடங்கியிருக்கும்.

இந்த வசதியை பெறுவதற்கு உங்களிடம் கட்டாயமாக இலத்திரனியல் மயமாக்கப்பட்ட அடையாள அட்டை இருத்தல் வேண்டும். அதில் உங்களுடைய ஓட்டுனர் உரிம அட்டையின் அனைத்து விபரங்களும் உள்ளடங்கியிருக்கும். காலாவதி திகதி, இழக்கப்பட்ட புள்ளிகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் அதில் பதிவேற்றப்பட்டிருக்கும். 

கடந்த பல மாதங்களாக சில மாவட்டங்களில் பரீட்சாத்த முயற்சியில் இருந்த இந்த சேவை, இன்று பெப்ரவரி 14, புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.

அதேவேளை, மிக விரைவில் வாகன பதிவு விபரங்கள், காப்புறுதி தொடர்பான விபரங்களும் இந்த அடையாள அட்டையுடன் இணைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்