Paristamil Navigation Paristamil advert login

 பலஸ்தீனத்துக்கு  அங்கீகரிக்க வழங்க வேண்டும் - கனடாவிடம் கோரிக்கை

 பலஸ்தீனத்துக்கு  அங்கீகரிக்க வழங்க வேண்டும் - கனடாவிடம் கோரிக்கை

14 மாசி 2024 புதன் 07:53 | பார்வைகள் : 5873


கனேடிய அரசாங்கம் பலஸ்தீன தேசத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆளும் லிபரல் கட்சியின் கூட்டணி கட்சியான என்.டி.பி கட்சி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதன் மூலம் மத்திய கிழக்கு சமாதான முனைப்புக்களை மேற்கொள்ள முடியும் என என்.டி.பி கட்சியின் வெளிவிவகாரத்துறை பொறுப்பாளர் ஹீத்தர் மெக்பிர்சன் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீன தேசத்தை சுதந்திர நாடாக அங்கீகரிப்பது குறித்த பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் – இஸ்ரேல் படையினருக்கு இடையிலான போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இஸ்ரேலிய தேசத்தை அங்கீகரிப்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாக பிரித்தானியா மற்றும் அமெரிக்கா என்பன தெரிவித்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பலஸ்தீன தேசம் தொடர்பிலான என்.டி.பி கட்சியின் யோசனைக்கு கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலியோ எதிர்க்கட்சிகளோ இதுவரையில் தங்களது நிலைப்பாட்டை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேவேளையில் பாலஸ்தீனர்களை ஆதரிக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் என்ற  கருத்தும் பலரிடையே சர்ச்சையாக எழுந்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்