Paristamil Navigation Paristamil advert login

இனிப்பால் புற்றுநோய், இனியும் வேண்டாம் தவிருங்கள். விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இனிப்பால் புற்றுநோய், இனியும் வேண்டாம் தவிருங்கள். விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

14 மாசி 2024 புதன் 08:06 | பார்வைகள் : 7609


கடைகளில் விற்பனையாகும் இனிப்பு வகைகளின்  சுவையின்மை அதிகரிக்கவும், நீண்ட நாட்கள் பழுதடைந்து போகாமல் இருக்கவும் தயாரிப்புகளில் சேர்க்கப்படும் (monoglycérides et diglycérides d'acides gras) மோனோகிளிசரைடுகள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் மனிதருக்கு 15% சதவீதம் புற்றுநோய் ஏற்படக் காரணமாகிறது என விஞ்ஞான ஆய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சிறுநீர் குழாய் அருகே இருக்கும் (prostate) சுரப்பியில் 46% சதவீதமும்  பெண்களுக்கு மர்பகங்களில் 24% சதவீதம் புற்றுநோய் ஏற்பட இந்த இனிப்பு வகைகளில் சேர்க்கப்படும் மேற்குறிப்பிட்ட அமிலங்கள் காரணமாக அமைவதாக ஆய்வில் மேலும் தெரியவந்துள்ளது.

இதேபோல் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிக அளவில் உட்கொள்வோர் உடல் பருமன், இருதய நோய்கள், மனச்சோர்வு போன்ற உளவியல் கோளாறுகள் போன்றவற்றின் அபாயத்திற்கும்  ஆளாக நேரிடும் எனவும் அவற்றிலும் அதிகளவு அமிலங்கள் சேர்க்கப்படுகிறது கனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

வர்த்தக‌ விளம்பரங்கள்