ஊடகவியலாளர்களை இலக்குவைத்து தாக்குதல் மேற்கொள்ளும் இஸ்ரேல்
14 மாசி 2024 புதன் 09:13 | பார்வைகள் : 4086
காசவில் இஸ்ரேல் மேற்கொண்டஇலக்குவைத்த தாக்குதலில் அல்ஜசீராவின் செய்தியாளரும் புகைப்படப்பிடிப்பாளரும் படுகாயமடைந்துள்ளனர்.
அல்ஜசீராவின் செய்தியாளர் இஸ்மாயில்அபு ஓமரும் படப்பிடிப்பாளர் அஹமட் மட்டாரும் படுகாயமடைந்துள்ளனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.
இன்வடபகுதியில் மோதல்கள்காரணமாக இடம்பெயர்ந்த மக்களிடம்விபரங்களை பெற்றுக்கொண்டிருந்தவேளை ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
ஆளில்லா விமானம் மூலம் ஏவப்பட்ட ஏவுகணை இவர்களை நேரடியாக தாக்கியது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
படுகாயமடைந்த நிலையில் இரண்டு ஊடகவியலாளர்களும் காசாவின் ஐரோப்பிய மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர் ஒமரின் ஒரு கால் துண்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அல்ஜசீரா மட்டாரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனவும்தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர்கள் என தங்களை அடையாளப்படுத்தும் விதத்தில் இரண்டு ஊடகவியலாளர்களும் காணப்பட்டவேளையே அவர்கள் தாக்கப்பட்டுள்ளதை வீடியோக்கள் காணப்பித்துள்ளன.