Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் முட்டைகள் வாங்கும் போது அதன் தரம் அறிய எதனைக் கவனிக்க வேண்டும்?

பிரான்சில் முட்டைகள் வாங்கும் போது அதன் தரம் அறிய எதனைக் கவனிக்க வேண்டும்?

14 மாசி 2024 புதன் 10:26 | பார்வைகள் : 5128


பிரான்சில் கோழி முட்டைகளை வாங்கும் போது அதன் அட்டைப் பெட்டிகளை விடவும் முட்டையின் கோதுப் பகுதியில் இருக்கும் எழுத்துக்களையும், இலக்கங்களையும் அவதானிக்க வேண்டும்.

முதலில் FR என்று ஆரம்பிக்கும் எழுத்துக்கள் பிரான்ஸ் தேசத்தில் வளர்க்கப்படும் கோழிகளின் முட்டைகள் என்பதினை எமக்கு உறுதிப்படுத்துகிறது, அடுத்துவரும் இலக்கங்களே முட்டையின் தரத்தை கூறுகிறது.

'Fr என்னும் எழுத்துகளை தொடர்ந்து இருக்கும் இலக்கங்களில் '0' பூச்சியம் என ஆரம்பித்தால் குறித்த முட்டையிட்ட கோழிகள் தாராளமாக திறந்த வெளிகளில் நடமாடி வளர்க்கப்பட்ட கோழிகளின் முட்டைகள் என்பதாகும், இதுவே முதல் தரமானவை.

இலக்கம் '1' ஒன்றில் ஆரம்பித்தால் கோழிகள் திறந்த வெளிகளிலும், குறைந்தளவு நேரம் மூடிய அறைகளிலும் வாழ்ந்தவை என்பது உறுதியாகும் இந்த முட்டைகள் இரண்டாம் தரமானவை.

அதே இலக்கம் '2' இரண்டில் ஆரம்பித்தால் முட்டையிட்ட கோழிகள் மூடிய அறைகளில் வெளிப்புறம் தெரியாமல் மின் விளக்கின் வெளிச்சத்தில் வாழ்ந்தவை என்பதாகும் இந்த முட்டைகள் பெரும்பாலும் ஆரோக்கியமான உணவு அல்ல.

இதே இலக்கம் '3' மூன்றில் ஆரம்பித்தால் அவை தூங்குவதற்கு கூட இடம் அளிக்காது,  அதிக வெளிச்சமான மின் விளக்குகளில், இரவு, பகல் தெரியாது உணவு கொடுத்து இறைச்சிக்காக மூடிய அறைகளில் வளர்க்கப்படும் கோழிகளின் முட்டைகள் என்பதினை கூறும் இவை தரம் குறைந்த ஆரோக்கியம் அற்றவை, இதனை உண்பதால் உடலுக்கு எந்தவிதமான பயனும் இல்லை.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்