ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி கைது செய்த இஸ்ரேல் ராணுவத்தினர்
14 மாசி 2024 புதன் 10:28 | பார்வைகள் : 3768
ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் நாட்டுக்கு எதிராக தாக்குதலை மேற்கொண்டது.
இந்நிலையில் இஸ்ரேல் ராணுவத்தினர் ஹமாஸ் அமைப்பை முற்றாக அழிக்கும் பொருட்டு தாக்குதலை இரக்கமின்றி மேற்கொண்டு வருகின்றது.
இஸ்ரேல் படைகளுக்கு எதிராக சமரியா பகுதியில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதியான உமர் பையத்தை கைது செய்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
மேலும் ஜெனின் பகுதியில் வைத்து இக்கைது நடவடிக்கை இடம்பெற்றதாகவும், இன்போது, இஸ்ரேல் வீரர்கள் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உமர், இஸ்ரேலுக்கு எதிராக மேலும் பல தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்தார் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே 4 மாதங்களுக்கும் மேலாக போர் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.