Paristamil Navigation Paristamil advert login

FR-Alert என்றால் என்ன? - நாளை பரிசில் பரீட்சாத்த முயற்சி!!

FR-Alert என்றால் என்ன? - நாளை பரிசில் பரீட்சாத்த முயற்சி!!

14 மாசி 2024 புதன் 11:22 | பார்வைகள் : 5477


நாளை, பெப்ரவரி 15 ஆம் திகதி பரிசில் வசிக்கும் உங்கள் தொலைபேசிக்கு ஒரு அவரச எச்சரிக்கை மணி விடுக்கப்படும். ஆனால் அதுகுறித்து அச்சப்படத்தேவையில்லை என பரிஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

FR-Alert எனும் எச்சரிக்கையானது அவசரகாலத்தின் போது காவல்துறையினரால் பொதுமக்களுக்கு விடுக்கப்படும் ஒரு எச்சரிக்கையாகும். மக்களது தொலைபேசியூடாக விடுக்கப்படும் இந்த எச்சரிக்கை வரும் ஒலிம்பிக் போட்டிகளின் போது பாதுகாப்பு பலப்படுத்தலுக்காக பரீட்சிக்கப்பட உள்ளது.



நாளை வியாழக்கிழமை 13 ஆம், 15 ஆம் மற்றும் 17 ஆம் மாவட்டங்களில் வசிப்போர்களது தொலைபேசிக்கு காலை 10 மணியில் இருந்து 11 மணிக்குள்ளாக இந்த எச்சரிக்கை விடுக்கப்படும். தொலைபேசிகள் ஒலி நிறுத்தப்பட்டிருந்தாலும் இந்த எச்சரிக்கை ஒலி எழுப்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து அச்சமடைய தேவையில்லை எனவும், காவல்துறையினரையோ, தீயணைப்பு படையினரையோ அழைக்கத்தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்