Paristamil Navigation Paristamil advert login

பரிசில் இருந்து 44 அகதிகள் வெளியேற்றம்!

பரிசில் இருந்து 44 அகதிகள் வெளியேற்றம்!

14 மாசி 2024 புதன் 14:00 | பார்வைகள் : 8323


ஒலிம்பிக் போட்டிகளை கருத்தில் கொண்டு பரிசில் கூடாங்களில், மேம்பாலங்களுக்கு கீழே தங்கியிருக்கும் அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கை கடந்த மாதம் முதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை காலை பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் இருந்து 44 அகதிகள் வெளியேற்றப்பட்டனர். 19 ஆம் வட்டாரத்தின் உள்ள quais de Charente மற்றும் quais de Gironde பகுதிகளில் சிறிய கூடாரங்களில் தங்கியிருந்த அகதிகளே வெளியேற்றப்பட்டதாக பரிஸ் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவர்கள் இல்-து-பிரான்ஸ் மாகாணத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வருட ஆரம்பத்தில் இருந்து இதுவரை 195 பேர் பரிசில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதேவேளை, இந்த குளிர்காலத்தின் போது இல்-து-பிரான்சுக்குள் 12,000 பேருக்கு இரவு நேர தங்குமிடங்களை அரசு ஏற்படுத்திக்கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்