ஆற்றில் நீராட சென்ற கால்பந்து வீரர் பலி
.jpg) 
                    2 ஆவணி 2023 புதன் 08:25 | பார்வைகள் : 10264
கடுமையான வெப்பம் காரணமாக ஆற்றில் நீராட சென்ற கால்பந்து வீரரை முதலை ஒன்று விழுங்கிவிட்ட சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது வாயில் கவ்விய உடல் பாகத்துடன் முதலை நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, உள்ளூர் மக்கள் அந்த முதலையை துப்பாக்கியால் சுட்டு, கால்பந்து வீரரின் உடலை மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அமெரிக்க நாடான கோஸ்ட்டா ரிக்காவை சேர்ந்தவர் 29 வயதான Jesus Alberto Lopez Ortiz என்ற கால்பந்து வீரர்.
தமது ரசிகர்களால் Chucho என அறியப்படும் இவர், துரதிர்ஷ்டவசமாக முதலைக்கு இரையாகியுள்ளார்.
அந்த முதலையை துரத்திச் சென்று உள்ளூர் மக்களே துப்பாக்கியால் சுட்டு, கால்பந்து வீரரின் சடலத்தை மீட்டதாக கூறப்படும் நிலையில், பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் அதிகாரிகளே துணிச்சலுடன் நடவடிக்கை முன்னெடுத்து, சடலத்தை மீட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இறுதிச்சடங்குகளை முன்னெடுக்க, பொதுமக்கள் நிதியுதவி அளிக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு
        CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan