Paristamil Navigation Paristamil advert login

பிரபல பின்னணி பாடகி தற்கொலை..

பிரபல பின்னணி பாடகி தற்கொலை..

14 மாசி 2024 புதன் 12:17 | பார்வைகள் : 7162


உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி மல்லிகா ராஜ்புத் என்பவர் பல ஹிந்தி பாடல்களை பாடியுள்ளார் என்பதும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று இரவு பாடகி மல்லிகா ராஜ்புத் தனது அறையில் தூங்க சென்ற நிலையில் அவரது அறையில் நீண்ட நேரம் விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் அவரது தாயார் சந்தேகம் அடைந்து கதவை தட்டி உள்ளார். ஆனால் எந்தவித பதிலும் இல்லை என்பதை எடுத்து ஜன்னலை திறந்து பார்த்தபோது மகள் தூக்கில் தொங்கி இருப்பதை பார்த்து அவரது தாயார் அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து உடனடியாக காவல்துறையினர் வரவழைக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பாடகி மல்லிகா ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அவரது பெற்றோரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். 35 வயதேயான இளம் பாடகி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்