Paristamil Navigation Paristamil advert login

மருத்துவ காப்புறுதி நிறுவனம் மீது சைபர் தாக்குதல்! - குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்க புதிய இணையத்தளம்!

மருத்துவ காப்புறுதி நிறுவனம் மீது சைபர் தாக்குதல்! - குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்க புதிய இணையத்தளம்!

14 மாசி 2024 புதன் 17:32 | பார்வைகள் : 8941


Vitale மருத்துவ அட்டைக்காக பணம் வழங்கும் இரண்டு காப்புறுதி நிறுவனங்கள் மீது கடந்த ஜனவரி மாத இறுதியில் சைபர் தாக்குதல் இடம்பெற்றிருந்தது. நோயாளிகள் பலரது தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Viamédis மற்றும் Almérys ஆகிய காப்புறுதி நிறுவனங்களது தகவல்களே திருடப்பட்டுள்ளன. இதில் கிட்டத்தட்ட 33 மில்லியன் மக்களது தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டதாக அறிய முடிகிறது. 

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் குற்ச்சாட்டுக்கள் தெரிவிக்க ஒரு புதிய பக்கத்தை உள்துறை அமைச்சகத்தின் இணையத்தளத்தில் உருவாக்கியுள்ளனர். 

இத்தகவலை நேற்று செவ்வாய்க்கிழமை உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்