13% சதவீதமான பேருந்து ஊழியர்களை இழந்த RATP நிறுவனம்!

15 மாசி 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 6838
கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் RATP தனது 13% சதவீதமான பேருந்து ஊழியர்கள் இழந்துள்ளது.
பேருந்து சேவைகளில் பணிபுரிந்த சாரதிகள், பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநர்கள் என மொத்தமாக 1,684 பேர் பணியில் இருந்து விலகியுள்ளனர். இவர்களில் 1,450 பேர் சாரதிகளாவார். வேலைச் சுமை, போதிய வருமானம் இல்லை என பல்வேறு காரணங்களை தெரிவித்து அவர்கள் வேலையை விட்டு விலகியுள்ளனர்.
முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு 1,492 பேர் இதேபோன்று பணியில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.