இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் 54.9 சதவீதமான மாணவர்கள் பாதிப்பு
15 மாசி 2024 வியாழன் 04:26 | பார்வைகள் : 2587
இலங்கையில் நிலவிய பொருளாதார நெருக்கடி நிலைமையால் மாணவ சமூகத்தின் 3 சதவீதமானனோர் கற்றல் நடவடிக்கைகளில் இருந்து முற்றாக விலகியுள்ளதாக தேசிய தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலை மாணவர்களில் 54.9 சதவீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய தொகை மதிப்பு மற்று புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 53.2 சதவீதமானோர், பாடசாலைக்கான புதிய உபகரணங்களை கொள்வனவு செய்வதை முற்றிலும் நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 44 சதவீதமான மாணவர்கள் புதிய பாடசாலை சீருடைகளுக்கான செலவை குறைத்துள்ளனர். அத்துடன் 40.6 வீத மாணவர்கள் மேலதிக வகுப்புகளில் பங்கேற்பதை நிறுத்தியுள்ளனர்.
அவர்களில், 28.1 சதவீதமானோர் மேலதிக வகுப்புகளை இணையவழி மூலம் மேற்கொள்வதாக தேசிய தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.