கார்த்தி தங்கையான பிரபல நடிகை..

15 மாசி 2024 வியாழன் 07:11 | பார்வைகள் : 6452
கார்த்தி நடித்து வரும் 27வது திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிகை ஸ்ரீ திவ்யா இணைந்தார் என்ற செய்தி வெளியானது. இதனை அடுத்து அவர் கார்த்திக் ஜோடியாக தான் நடிப்பார்கள் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின்படி அவர் கார்த்தியின் சகோதரியாக நடித்து வருவதாக தெரிகிறது. நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து அவர் கார்த்திக்கு சகோதரியாக நடிக்க ஒப்புக் கொண்டதாக இருக்கிறது.
மேலும் இந்த படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடித்து வருகிறார் என்பதும் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் நட்பு மற்றும் காதல் கதை அம்சம் கொண்டது என்றும் தெரிகிறது. இந்த படத்தில் நடிகை சுவாதி கொண்டே நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்திற்கு மெய்யழகன் என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1