காதலுக்கு ஒரு நாள்

15 மாசி 2024 வியாழன் 09:00 | பார்வைகள் : 4430
பெப்ரவரி 14 உலகம் முழுவதிலும் உள்ள மக்களில் அதிகமானவர்கள் காதலர் தினத்தை கொண்டாடி தீர்த்துக்கொண்டிருக்கின்றனர்.
காதலுக்கு என்று ஒரு தினம் . ஆனால் காதலை ஒரே நாளில் நாம் கொண்டாடி தீர்க்க முடியாது.
இறைவன் படைத்த அதி உன்னதமான உணர்வு காதல். இந்த உலகில் காதல் வசப்படாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது.
எந்த உயிரும் இருக்க முடியாது. நாம் பிறப்பதற்கு முன்பிலிருந்து நாம் இறந்ததற்கு பின்னரும் இந்த பூமியில் நிலைத்திருப்து காதல்தான்.
எல்லாம் மாறினாலும் காதல் என்றும் மாறுவதில்லை. யுகம் யுகமாக காதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
காதலை கொண்டாடதவர்க்ள என்று யாரும் இருக்க முடியாது .. மீசை முளைக்கட்டும் பருவம் தொட்டு மீசை நரைத்து கூன் விழுந்த பின்னரும் நம் மனதை பட்டாம் பூச்சியாக பறக்கவைப்பது காதல் தான்.
எப்போது எங்கு யார் மீது நாம் காதல் வயப்படுவோம் என்று யாருக்கும் சொல்ல முடியாது அதுதான் காதல்.. உயிரை குடைந்து உள்ளுக்குள் உயிரை சிலிர்க்க வைத்து பூக்க வைக்கும் உன்னதம்.
காதல் வெறும் ஹோர்மன் சுரப்பதனால்தான் வருகின்றது என்று கூறப்பட்டாலும் .
ஒருவரை நாம் நேசிக்கும் போது நம்மில் ஏற்படும் உணர்வுகளை எம்மால் அது ஹோர்மன் செய்யும் வேலை என்று விலகி செல்ல முடியாது.
ஏன் எனில் அந்த உணர்வை நாம் அனுபவிக்கலாமே தவிர, வார்த்தைகளால் விளக்க முடியாது.
அந்த அற்புதமான உணர்வின் பெயரில் இன்று தேவையற்ற விடயங்களில் காதலை கொச்சைப்படுத்துவோரும் உண்டு.
ஆணினும் உண்மையான காதல் என்றும் அழுக்குப்படிவதில்லை. யுகங்களை தாண்டி அது என்றும் அழகோடும்ங இளமையோடும் இருப்பதோடு, எம்மையும் அழகுப்படுத்திக்கொண்டுத்தான் இருக்கின்றது.
காதலுக்குரிய இன்றைய தினம் , ரோமானியப் பேரரசில் இருந்து காதலர் தினமாக கொண்டாடப்படுவதாக வரலாறுகள் கூறுகிறது.
ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்துக் கொண்டால் அவர்களின் வீரம் குறைந்துவிடும் என்பது அந்நாட்டு அரசரின் எண்ணமாக இருந்துள்ளது.
எனவே தான் அந்நாட்டில் உள்ள ஆண்கள் திருமணம் செய்துக் கொள்வதற்குத் தடை விதித்துள்ளார்.
ஆயினும் திருமணம் செய்துக்கொள் விரும்பிய ஆண்களுக்கு வேலண்டைன் எனும் பாதிரியார் திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்த விஷயம் மன்னனுக்கு தெரிய வர பாதிரியார் வேலண்டைனுக்கு பெப்ரவரி 14 ஆம் திகதியன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் காதலர் தினமாக கொண்டாடப்படுவதாக வரலாறுகள் கூறுகிறது.
இது பொதுவான விஷயமாக இருந்தாலும், ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு விதமான வரலாறுகளுடன் இந்த நாளைக் கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காதலுக்காக எத்தனையோ பேர் உயிர்களை தியாகம் செய்திருக்கின்றனர். ஆனால் என்றும் காதல் அழிவதில்லை. காதலர்கள் இறந்தாலும் காதல் என்றும் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கும்.
நன்றி வீரகேசரி