இஸ்ரேல் - ஹமாஸ் போர் - அதிகரிக்கும் உயிரிழப்புகள்
15 மாசி 2024 வியாழன் 09:27 | பார்வைகள் : 2415
காஸாவில் கடந்த 07.02.2023 முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28,576-ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணித்தியாலம் மட்டும் 103 பேர் உயிரிழந்தனர்.
145 பேர் காயமடைந்தனர்.
இந்தப் பகுதியில் இஸ்ரேல் படையினர் கடந்த 07.10.2023 முதல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28,576-ஆக அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை சுமார் 68,291 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா பகுதியில் ஆட்சி செலுத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஊடுருவி சுமார் 1,200 பேரை படுகொலை செய்தனர்.
அத்துடன், சுமார் 250 பேரை அங்கிருந்து அவர்கள் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனர்.
அதையடுத்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.