மீண்டும் ஏவுகணைச் சோதனைகளை மேற்கொள்ளும் வடகொரியா..
15 மாசி 2024 வியாழன் 10:05 | பார்வைகள் : 2215
வடகொரியா நாடானது மீண்டும் மீண்டும் சோதணைகளை நடாத்தி தென்கொரியா நாட்டை சீண்டி வருகின்றது.
வடகொரியா, வடகிழக்குக் கடற்பகுதியில் ஏவுகணைச் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தென் கொரிய இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது.
அத்துடன் வடகொரியாவினால் வீசப்பட்ட ஏவுகணைகள் கிழக்கு கடற்கரை நகரமான பொன்சானில் கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க இராணுவத்துடன் இணைந்து தாம் ஆய்வு செய்து வருவதாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது.
எனினும் எத்தனை ஏவுகணைகள் வீசப்பட்டன..? அவை எவ்வளவு தூரம் பறந்தன போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
அண்மையில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தென்கொரியாவுக்கு எதிரான போருக்கு தாம் தாயாராக இருக்கவேண்டும் என தமது பாதுகாப்புப் படையிடம் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்” Kim Jong Un)தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.