அழகிய இளம்பெண்ணின் உயிரை பறித்த நோய்க்கிருமி
2 ஆவணி 2023 புதன் 09:10 | பார்வைகள் : 5426
Naegleria fowleri எனப்படும் நீர்நிலைகளில் காணப்படும் கிருமி, பாக்டீரியாக்களை உண்ணும் ஒரு கிருமியாகும்.
இந்த கிருமி மிதமான வெப்பநிலை கொண்ட குளங்கள், ஏரிகள், சுடுநீர் ஊற்றுகள் போன்ற இடங்களில் வாழக்கூடியதாகும்.
இந்த கிருமிகள், நீர்நிலைகளில் மக்கள் நீந்தும்போது, அவர்களுடைய மூக்கு வழியாக மூளைக்குள் நுழைந்துவிடும்.
மூளைக்குள் சென்று மூளையை சேதப்படுத்தி, மரணத்தையும் ஏற்படுத்திவிடக்கூடியவை ஆகும்.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில், கடந்த மாதம், அதாவது, ஜூலை 11ஆம் திகதி, Megan Ebenroth (17) என்னும் இளம்பெண் தன் தோழிகளுடன் நீந்தச் சென்றிருக்கிறாள்.
நான்கு நாட்களுக்குப் பின் கடுமையான தலைவலி ஏற்பட்டதால் மேகனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.
எதனால் அந்த தலைவலி என்பது முதலில் தெரியவராத நிலையில், ஜூலை 21ஆம் திகதிதான் மேகன் Naegleria fowleri எனப்படும் நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்ல் மேகன் உயிரிழந்துவிட்டார்.
சமீபத்தில், நெவடா மாகாணத்தில், Woodrow Bundy என்னும் இரண்டு வயது சிறுவன், சுடுநீர் ஊற்று ஒன்றில் விளையாடும்போது இந்த நோய்க்கிருமியின் பாதிப்புக்குள்ளாகி, ஏழு நாட்கள் அந்த கிருமியின் பாதிப்பால் ஏற்பட்ட பிரச்சினைகளுடன் போராடிய நிலையில் உயிரிழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.