விண்ணில் பாயவுள்ள INSAT-3DS செயற்கைகோள் - நேரத்தை அறிவித்த இஸ்ரோ
16 மாசி 2024 வெள்ளி 07:56 | பார்வைகள் : 1748
இந்திய விண்வெளிஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ 'இன்சாட்-3டிஎஸ்' என்ற செயற்கைகோளை வடிவமைத்து, ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட்டில் பொருத்தி நாளை விண்ணில் செலுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 17 அன்று மாலை 5.30 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
இன்சாட்-3டிஎஸ் மொத்தம் 2,275 கிலோ எடை கொண்டதாகும். இதில் 6 இமேஜிங் சேனல்கள் உட்பட 25 விதமான ஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
51.7 மீட்டர் உயரத்துடன் 3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டின் முதல் நிலையில் 139-டன் உந்துசக்தியைக் கொண்ட திட உந்துசக்தி மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளது.
இது பூமியின் பருவ நிலை மாற்றத்தை துல்லியமாக கண்காணித்து வானிலைக்கான தகவல்கைள நிகழ் நேரத்தில் வழங்கும்.
இதன் மூலமாக புயல், கனமழை உட்பட இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும் இதற்கான கவுண்ட்டவுன் இன்று பகல் 2 மணி 5 நிமிடத்தில் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.