Paristamil Navigation Paristamil advert login

ரொறன்டோவில்  அதிக வாகன விபத்துக்கள் தொடர்பில் வெளியாகிய தகவல்

ரொறன்டோவில்  அதிக வாகன விபத்துக்கள் தொடர்பில் வெளியாகிய தகவல்

16 மாசி 2024 வெள்ளி 08:17 | பார்வைகள் : 8739


கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் கடுமையான பனிபொழிவு நிலைமை காரணமாக வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

ரொறன்ரோ பெரும்பாக பகுதியை பனிப்புயல் ஊடறுத்துச் செல்வதாக சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பனிமூட்டம் காரணமாக போக்குவரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வடமேற்கு பகுதியில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அநேகமாக இடங்களில் சிறு வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

சுமார் 60க்கும் மேற்பட்ட விபத்துக்கள் பதிவானதாக ஒன்றாரியோ பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்