கொழும்பில் இளைஞனை கடத்திய 50 வயதான பெண்!

2 ஆவணி 2023 புதன் 11:06 | பார்வைகள் : 8378
அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் இருந்து இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று அச்சுறுத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, ஜூலை 24 அன்று சந்தேக நபர்களால் 25 வயதுடைய இளைஞன் கடத்தப்பட்டு, சிறைபிடிக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவிசாவளை பொலிஸார் இரு ஆண்களையும், அவர்களுக்கு உதவிய பெண் ஒருவரையும் கைது செய்துள்ளதுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பிக்கப் ரக வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
அவிசாவளை மற்றும் கெட்டஹெத்த பிரதேசத்தில் வசிக்கும் 26 வயது மற்றும் 27 வயதுடைய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் குறித்த பெண் அவிசாவளையை வசிப்பிடமாக கொண்ட 50 வயதுடையவர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக சந்தேகநபர்கள் இளைஞரை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.