ஆடு மேய்ப்பவரும் காட்டு ஆடுகளும்
16 மாசி 2024 வெள்ளி 09:30 | பார்வைகள் : 1893
ஒரு ஆடு மேய்கிறவரு காட்டுக்குள்ள போய் ஆடு மேய்ச்சிகிட்டு இருந்தாரு.
அது மழை காலம்கிறதுனால காட்டுக்குள்ள நிறய உணவு கிடைக்கல ,அதனால் தன்னோட வீட்டு விவசாய நிலத்துல விளைஞ்ச புள்ள போட்டு ஆடுகளை கொஞ்சநாள் வளர்க்கலாம்னு நினைச்சாரு
அந்த நேரத்துல சில காட்டு ஆடுகளும் அவரோட மந்தையில் வந்து சேர்ந்துச்சுங்க
அதுங்களுக்கு தன்னோட வீட்டுல இருந்த சாப்பாட்டை கொடுத்ததும் ,அதுங்க அங்கேயே தங்கிடுச்சுங்க
செலவு இல்லாம நிறய ஆடுகள் கிடைச்சதுல அந்த ஆடு மேய்கிறவருக்கு ரொம்ப சந்தோசம் அதனால
புதுசா வந்த காட்டு ஆடுகளுக்கு நிறய உணவும் ,ஏற்கனவே இருந்த ஆடுகளுக்கு உயிர் வாழுற அளவுக்கு சாப்பிடும் கொடுத்தாரு
மழைகாலம் முடிஞ்சதும் அந்த காட்டு ஆடுகள் தங்களோட வாழ்விடமான் காட்டுக்கு போக ஆரம்பிச்சுச்சுங்க
அத பார்த்த ஆடு மேய்கிறவருக்கு ரொம்ப வருத்தமா போச்சு ,நான் உங்களுக்கு நிறைய சாப்பாடு கொடுத்ததும் இப்படி உங்க வாழ்விடத்துக்கு போறீங்களேன்னு கேட்டாரு
அதுக்கு அந்த காட்டு ஆடுகள் சொல்லுச்சு ,நீங்க புது ஆடுகள் வந்ததும் பழைய ஆடுகளுக்கு உணவு கொடுக்காம புது ஆடுகளுக்கு நிறய உணவு கொடுத்தீங்க
நாங்க உங்களோடவே தங்கிட்டா நாங்க பழைய ஆடா மாறிடுவோம் ,புது ஆடு எதாவது இங்க வந்துச்சுனா எங்களுக்கு போதுமான உணவு கொடுக்க மாட்டீங்க
அதனால நாங்க எங்க வழிய பார்த்துகிட்டு போறோம்னு சொல்லிட்டு ,காட்டு பகுதிக்கு போயிடுச்சுங்க
புது ஆடுகள் வந்ததும் பழைய ஆடுகளை உணவு சரியா கொடுக்காம விட்டத நினைச்சு வருத்தப்பட்டாரு அவரு
நீதி : புதிய நண்பர்களுக்காக பழைய நண்பர்களை மோசமாக நடத்துவது விவேகமற்றது.