Paristamil Navigation Paristamil advert login

'எஸ்டிஆர் 48' படத்தில் சிம்புவின் அதிரடி...!

'எஸ்டிஆர் 48' படத்தில்  சிம்புவின் அதிரடி...!

16 மாசி 2024 வெள்ளி 13:00 | பார்வைகள் : 687


சிம்புவின் அடுத்த படமான ’எஸ்டிஆர் 48’ திரைப்படத்தில் அவர் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதில் ஒரு வேடம் அவர் இதுவரை நடிக்காத கேரக்டர் என்ற ஆச்சரிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சிம்பு நடிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகயிருக்கும் திரைப்படம் ‘எஸ்டிஆர் 48’. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் முதல் கட்டமாக இந்த படத்தில் நடிக்கும் நாயகி உட்பட நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய தகவலின்படி இந்த படத்தில் மிருணாள் தாக்கூர் நாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு ஹீரோ மற்றும் வில்லன் இரண்டு கேரக்டர்களில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதில் ஒரு கேரக்டர் திருநங்கை என்று கூறப்படுவது தான் மிகப்பெரிய ஆச்சரியமாக உள்ளது. இந்த திருநங்கை கேரக்டர் ஹீரோவா? அல்லது வில்லனா? என்பது தான் ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ்

அதுமட்டுமின்றி இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாகவும் முதல் பாகம் வெற்றி பெற்றால் இரண்டாம் பாகமும் உடனே உருவாகும் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் சிம்பு ரசிகர்களுக்கு சூப்பர் விருந்தாக அமையப்போகும் ‘எஸ்டிஆர் 48’ திரைப்படம் அவருடைய திரையுலக வாழ்வில் ஒரு மைல்கல் என்ற கூறலாம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்