Paristamil Navigation Paristamil advert login

இலங்கை ரூபாயில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு

இலங்கை ரூபாயில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு

2 ஆவணி 2023 புதன் 15:54 | பார்வைகள் : 8738


கடந்த 15 நாட்களுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 309 ரூபா 70 சதமாகவும் விற்பனை விலை 322 ரூபா 68 சதமாகவும் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், நேற்று முன்தினம் கொள்முதல் விலை 322 ரூபா 96 சதமாகவும், விற்பனை விலை 335 ரூபா 40 சதமாகவும் பதிவாகியிருந்தது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்