மன்னார் சிறுமியின் மரணம் - காரணம் வெளியானது

17 மாசி 2024 சனி 12:39 | பார்வைகள் : 10017
தலைமன்னார் - வடக்கு பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட 10 வயது சிறுமியின் சடலம் மீதான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது.
இதில் குறித்த சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானமைக்கான அறிகுறிகள் காணப்படுவதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி எஸ்.பிரணவன் முன்னிலையில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட தென்னந்தோப்பில் பணியாற்றி வந்த திருகோணமலை - குச்சவெளி பகுதியைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்
அவர் மன்னார் நீதவான் முன்னிலையில் இன்று பிரசன்னப்படுத்தப்பட்டார்.
இந்தநிலையில், சந்தேகநபரை 48 மணித்தியாலத்துக்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு மன்னார் நீதவான் அனுமதியளித்துள்ளார்
நேற்று முன்தினம் இரவு முதல் குறித்த சிறுமி காணாமல் போயிருந்ததாக அவரது பாட்டி காவல்துறையினரிடம் முறைப்பாடளித்திருந்தார்.
இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சிறுமியின் சடலம் நேற்று மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025