'பெப்பர் சிக்கன் மசாலா
17 மாசி 2024 சனி 12:49 | பார்வைகள் : 1788
வீட்டிலேயே எளிய முறையில் சாதம், சப்பாத்தி, நாணுடன் சேர்த்து சாப்பிட பெப்பர் சிக்கன் மசாலா எப்படி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோழி - 500 கிராம்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2 நடுத்தர
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 2.5 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் தூள் - 1 டீஸ்பூன்
நுணுக்கிய கருப்பு மிளகு - 2 டீஸ்பூன்
பச்சை ஏலக்காய் - 4
இலவங்கப்பட்டை - 1
கிராம்பு - 4
கறிவேப்பிலை - 15-20
உப்பு - 1/2 டீஸ்பூன்
மரினேஷன் செய்ய தேவையானவை :
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1.5 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் கோழிகளை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், மிளகுத் தூள், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.
அடுத்து கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நுணுக்கிய கிராம்பு, பட்டை மற்றும் ஏலக்காய் சேர்த்து கொள்ளுங்கள்.
பிறகு அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து கிளறிவிட்டு கொள்ளவும்.
பின்னர் அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வதக்கவும்.
கண்ணாடி பதத்திற்கு வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து குறைந்த வெப்பத்தில் 2 நிமிடம் வதக்கிக்கொள்ளுங்கள்.
இஞ்சி, பூண்டின் பச்சை வாசனை போனவுடன் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மிதமான தீயில் 2-3 நிமிடங்கள் வதக்கவும்.
தக்காளி மென்மையாக வதங்கியவுடன் மிளகாய் தூள், மல்லி தூள், பெருஞ்சீரகம் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 3 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்..
மசாலாக்களின் பச்சை வாசனை போனவுடன் மாரினேட் செய்து வைத்துள்ள கோழித் துண்டுகளைச் சேர்த்து 4 நிமிடங்கள் அதிக வெப்பத்தில் வதக்கவும்.
கோழித் துண்டுகளை பொன்னிறமாக மாறி எண்ணெய் பிரியும் வரை 2-3 நிமிடங்கள் மிதமான தீயில் தொடர்ந்து வறுக்கவும்.
இப்போது கோழியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து மூடி போட்டு சிக்கன் மென்மையாக வேகும் வரை 20 நிமிடங்கள் குறைந்த வெப்பத்தில் சமைக்கவும். குறிப்பு : மறக்காமல் கோழியை 10 நிமிடம் கழித்து ஒரு முறை கிளறிவிடவும்.
அடுத்து மூடியை அகற்றி 2 டீஸ்பூன் நுணுக்கிய மிளகு சேர்த்து கலந்து விட்டு 3 நிமிடங்கள் மிதமான தீயில் வறுத்து எடுத்தால் சுவையான பெப்பர் சிக்கன் மசாலா ரெடி.