Paristamil Navigation Paristamil advert login

வங்கிக்கு தீ வைத்த பெண் கைது!

வங்கிக்கு தீ வைத்த பெண் கைது!

18 மாசி 2024 ஞாயிறு 05:42 | பார்வைகள் : 16244


வங்கி ஒன்றுக்கு தீ வைத்த பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெப்ரவரி 15, வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் Nanterre நகரில் உள்ள Société Générale வங்கிக்குச் சென்ற பெண் ஒருவர், வங்கியை தீ வைத்து எரித்துள்ளார். தீ வேகமாக பரவி கட்டிடத்தின் ஜன்னல் பகுதிகளை சேதமாக்கியுள்ளது.

பின்னர் வங்கியில் உள்ள தீ அணைப்பானால் தீ அணைக்கப்பட்டது. குறித்த பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

மேற்படி தீ வைத்து எரியூட்டப்பட்ட சம்பவம் காணொளியாக பதிவு செய்யப்பட்டு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்