மீண்டும் களத்திற்கு வந்து ஹாட்ரிக் சிக்ஸர்! 2வது இரட்டைசதம் அடித்த ஜெய்ஸ்வால்
18 மாசி 2024 ஞாயிறு 08:48 | பார்வைகள் : 5589
இங்கிலாந்து எதிரான மூன்றாவது டெஸ்டில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டாவது இரட்டை சதத்தினை பதிவு செய்தார்.
ராஜ்கோட்டில் நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய 556 ஓட்டங்கள் பெற்று டிக்ளேர் செய்துள்ளது.
சதத்தினை நோக்கி பயணித்த சுப்மன் கில், 91 ஓட்டங்களில் இருந்தபோது ஸ்டோக்ஸ், ஹார்ட்லியால் ரன்அவுட் செய்யப்பட்டார்.
அடுத்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீண்டும் களத்திற்கு வந்தார். அதிரடியாக விளையாட தொடங்கிய அவர், சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை விரட்டினார்.
குறிப்பாக ஆண்டர்சன் வீசிய ஓவரில் ஜெய்ஸ்வால் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்த மைதானத்தை அதிர வைத்தார். மறுமுனையில் சார்பராஸ் கான் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார்.
இதற்கிடையில் ஜெய்ஸ்வால் தனது இரண்டாவது டெஸ்ட் இரட்டை சதத்தினை பதிவு செய்தார். அவரது ஸ்கோரில் 12 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள் அடங்கும்.
ஜெய்ஸ்வால் - சார்பராஸ் கான் 172 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன்மூலம் இந்திய அணி 430 ஓட்டங்கள் குவித்தது.
அப்போது கேப்டன் ரோகித் சர்மா டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். ஜெய்ஸ்வால் 214 ஓட்டங்களுடனும், சார்பராஸ் கான் 68 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
556 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கினை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கி ஆடி வருகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan