இறுதிப்போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்த பூரன்! கோப்பையை தட்டித்தூக்கிய மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ்
18 மாசி 2024 ஞாயிறு 09:54 | பார்வைகள் : 2158
இன்டர்நேஷனல் லீக் டி20 கோப்பையையை பூரன் தலைமையிலான MI எமிரேட்ஸ் அணி வென்றது.
துபாயில் நடந்த இன்டர்நேஷனல் லீக் டி20 இறுதிப் போட்டியில் MI எமிரேட்ஸ் மற்றும் துபாய் கேபிடல்ஸ் அணிகள் மோதின.
துபாய் அணி நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி MI அணியில் தொடக்க வீரர்களாக முகமது வசீம், குசால் பெரேரா இருவரும் களமிறங்கிய அதிரடி பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இதன்மூலம் முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 77 ஓட்டங்கள் குவிக்கப்பட்டது. 24 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்திருந்த வசீம் ஆட்டமிழந்தார். அடுத்து குசால் பெரேராவும் 38 (26) ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரஸா பந்துவீச்சில் அவுட் ஆனார்.
அதன் பின்னர் ஆண்ட்ரே பிளெட்சர் மற்றும் நிக்கோலஸ் பூரன் கூட்டணி துபாய் கேபிடல்ஸ் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.
இருவரும் அரைசதம் விளாச MI அணி 208 ஓட்டங்கள் குவித்தது. பூரன் ஆட்டமிழக்காமல் 27 பந்துகளில் 6 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 57 ஓட்டங்களும், பிளெட்சர் 37 பந்துகளில் 53 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய துபாய் கேபிடல்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களே எடுத்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
நிக்கோலஸ் பூரன் ஆட்டநாயகன் விருதையும், சிக்கந்தர் ரஸா தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.