கனடாவில் பறவைகளுக்கிடையே பரவி வரும் நோய்
18 மாசி 2024 ஞாயிறு 10:21 | பார்வைகள் : 3008
கனடாவில் சுமார் மூன்று மில்லியன் பறவைகளுக்கு, பறவைக் காய்ச்சல் நோய் பரவுகை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஈஸ்டர் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ள நிலையில், நாட்டில் பறவைக் காய்ச்சல் தொற்று பரவுகை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து மாதங்களாக கனடாவில் பறவைக் காய்ச்சல் பரவுகை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் விலங்குப் பண்ணைகளிலும் வர்த்தக ரீதியற்ற பண்ணைகளிலும் வளர்க்கப்படும் பறவைகள் அதிகளவில் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளன.
கனடிய உணவு பரிசோதனை திணைக்களம் பறவைக் காய்ச்சல் பரவுகை தொடர்பில் அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கனடா மட்டுமன்றி உலகின் ஏனைய பல நாடுகளிலும் பறவைக் காய்ச்சல் பரவுகை அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கோழிகள் தவிர்ந்த ஏனைய பல பறவைகள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.