பிரெஞ்சு அரசமைப்பு சபையின் அதிகாரங்களை குறைக்க வேண்டும்! - மக்கள் கருத்து!

18 மாசி 2024 ஞாயிறு 10:40 | பார்வைகள் : 8719
ஜனாதிபதி மக்ரோன் அரசாங்கம் அண்மையில் 'குடியேற்ற சட்டத்தில்' பல்வேறு சீர்திருத்தம் கொண்டு வந்திருந்தது. எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கத்தினரின் எதிர்ப்பையும் மீறி அது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
பிரான்சின் சட்டமாற்றங்களை சட்டப்புத்தகத்தில் இணைக்கும் சபையான அரசமைப்பு சபை (CONSEIL CONSTITUTIONNEL) சில மாறுதல்களுடன் அதனை ஏற்றுக்கொண்டு சட்டமாக்கியது.
இந்நிலையில், அரசமைப்பு சபையின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.. Cnews ஊடகத்துக்காக CSA Institute நிறுவனம் மேற்கொண்டிருந்த கருத்துக்கணிப்பு ஒன்றில் 44% சதவீதமான மக்கள் 'அதிகாரங்களை குறைக்க வேண்டும்' என கருத்து தெரிவித்துள்ளனர்.
40% சதவீதமான மக்கள் 'அதிகாரங்களை குறைக்கத் தேவையில்லை!' எனவும், 16% சதவீதமானோர் கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.