யாப்பு இயற்று சபையின் அதிகாரங்களைக் குறைக்க மக்கள் கோரிக்கை!!
18 மாசி 2024 ஞாயிறு 11:06 | பார்வைகள் : 2935
யாப்பு இயற்று சபையின் அதிகாரங்களைக் குறைக்க மக்கள் கோரிக்கை!!
பிரான்சின் யாப்பு இயற்று ஆலோசனை சபையான CONSEIL CONSTITUTIONNEL பிரான்சின் சட்டங்களை இயற்றி ஆலோசிப்பதுடன், அவற்றை பாராளுமன்றம் மற்றும் செனட் சபையின் வாக்கெடுப்பிற்கும் பரிந்துரை செய்யும்.
இது அண்மையில் குடியேற்றவாளர்கள் மற்றும் அகதித் தஞ்சம் தொடர்பான கடுமையான 32 சட்டங்களை இயற்றி அவற்றைப் பாராளுமன்றத்திலும் நிறைவேற்றியது.
முக்கியமாக பிரான்சில் அகதித்தஞ்சம் கிடைத்தவர்கள் தங்களின் குடும்பங்களைப் பிரான்சிற்கு அழைப்பதில் பெரும் முட்டுக்கட்டைகளை இந்தச் சட்டம் ஏற்படுத்தி உள்ளது.
இதன் சட்டவாக்கல் அதிகாரங்களை மட்டுப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்டையில், ஒரு பிரபல ஊடகத்திற்காக, முக்கிய கருத்துக் கணிப்பு நிறுவனம் ஒரு கருத்துக்கணிப்பை நடாத்தியது.
இதில் பெரும்பான்மையாக 44% வீத மக்கள் சட்டவாக்கல் அதிகாரங்களை மட்டுப்படுத்தவேண்டும் எனவும், இதற்கெதிராக மட்டுப்படுத்தத் தேவையிலலை 40% மக்களும் வாக்களித்துள்ளனர். 16% மக்கள் இதற்குப் பதிலளிக்க விரும்பவில்லை எனவும் இந்தக் கருத்துக் கணிப்பை நடாத்திய Institut CSA தெரிவித்துள்ளது.