இலங்கையில் யுக்திய நடவடிக்கை போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கும் வரை தொடரும்

18 மாசி 2024 ஞாயிறு 11:53 | பார்வைகள் : 3543
இலங்கையில் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கும் வரை யுக்திய நடவடிக்கை தொடரும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
ஜூன் 30 ஆம் திகதி வரை இந்த நடவடிக்கையை மேற்கொள்ள பொலிஸாருக்கு அமைச்சர் அலஸ் அனுமதியளித்துள்ளார்.
குறிப்பிட்ட காலப் பகுதியில் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்காவிட்டால் ஜூன் 30க்குப் பிறகும் நடவடிக்கை தொடரும் என அமைச்சர்
இதேவேளை, இன்று அதிகாலை 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் யுக்திய நடவடிக்கையில் மேலும் 785 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான 613 குற்றங்கள் பதிவாகியுள்ளதாகவும், 172 சந்தேக நபர்களும் குற்றப்பிரிவு தேடப்படும் பட்டியலில் உள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹெரோயின், ஐஸ், கஞ்சா, மாவா உள்ளிட்ட போதைப் பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.