Paristamil Navigation Paristamil advert login

தொடருந்துப் பணிப்புறக்கணிப்பு!! பயணச்சீட்டுப் பணத்தை மீளப்பெறுவது எப்படி? 50 சதவீத சலுகை பெறுவது எப்படி?

தொடருந்துப் பணிப்புறக்கணிப்பு!! பயணச்சீட்டுப் பணத்தை மீளப்பெறுவது எப்படி? 50 சதவீத சலுகை பெறுவது எப்படி?

18 மாசி 2024 ஞாயிறு 11:58 | பார்வைகள் : 1054


இந்த வார இறுதியில் அதாவது 16,17,18 பல பாடசாலை பிரிவிகளிற்கு பாடசாலை விடுமுறை ஆரம்பமாகியதும் சில பிரிவுகளிற்கு இரண்டாவது வாரமாகவும் உள்ள நிலையில் பெரும்பாளானவர்கள் தொடருந்துகளின் மூலம் விடுமுறைக்குச் செல்ல முன்பதிலு செய்திருந்தனர்.

இந்நிலையில் பயணச்சீட்டுப் பரிசோதகர்களின் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தினால் பெருமளவான TGV தொடருந்துச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. பயணிகளிற்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக SNCF தொடருந்து இரத்துச் செய்தமையை அறிவித்துள்ளது.

இப்படி தொடருந்துச் சேவை இரத்துச் செய்யப்படும் போது பயணச் சீட்டிற்காகச் செலுத்திய பணத்தை மீளப் பெறுவது எப்படி?

வேறு திகதிக்கு மாற்றம் அல்லது இரத்துச் செய்தல் என்பன , குறித்த தொடருந்தின் குறித்த புறப்பாட்டு நேரத்தின் முன்னர் செய்வதன் மூலம் மட்டுமே முழுமையான பணத்தை மீளப்பற முடியும்.

SNCF இன் SNCF Connect செயலி மூலம் முன்பதிவு செய்தவர்கள் 3635 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இரத்துச் செய்வதாயின் பணம் மீளப்பபொறுதோ அல்லது வேறு திகதிக்கு மாற்றவோ முடியும்.

வேறு இணையத்தளத்தில் முற்பதிவு செய்தவர்கள் அந்த இணையவழி மூலம் இரத்துச் செய்வதாயின் பணம் மீளப்பபொறுதோ அல்லது வேறு திகதிக்கு மாற்றவோ முடியும்.

அத்துடன் இந்த சங்கடங்களிற்காக SNCF ஒரு வர்த்தக சலுகையும் வழங்கும்.

தொடருந்துச் சேவை இரத்துச் செய்யப்பட்டமையை SNCF குறுஞ்செய்தி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அறிவித்த 30 நாட்களிற்குள், நீங்கள் முற்பதிவு செய்யும் பயணச்சீட்ட்டிற்கு அதன் தொகையில் 50 சதவீதம் மட்டுமே அறிவிடப்படும்.

இது மின்னஞ்சலிலோ அல்லது குறுஞ்செய்தியிலோ குறிப்பிடப்படாவிட்டாலும், நீங்கள் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.

இது TGV, iNoui, Intercités போன்றவற்றிற்கும் செல்லுபடியாகும்
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்