Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு தடை விதித்த காவல்துறை!!

பரிஸ் : ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு தடை விதித்த காவல்துறை!!

18 மாசி 2024 ஞாயிறு 12:18 | பார்வைகள் : 6352


இன்று ஞாயிற்றுக்கிழமை பரிசில் இடம்பெற இருந்த ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

அல்ஜீரியா சுதந்திரபோராட்ட தியாகி Shahid என்பவருடைய நினைவு நாளுக்காக பரிசில் அல்ஜீரிய மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட இருந்த நிலையில், அந்த ஆர்ப்பாட்டத்துக்கு பரிஸ் காவல்துறை தலைமையகம் தடை விதித்துள்ளது. 

place de la Nation  பகுதியில் பிற்பகல் 2 மணி அளவில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற திட்டமிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில், சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் ஆபத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்