Paristamil Navigation Paristamil advert login

Yvelines : வீதி விபத்தில் 18 வயது இளைஞன் உள்ளிட்ட இருவர் பலி!

Yvelines : வீதி விபத்தில் 18 வயது இளைஞன் உள்ளிட்ட இருவர் பலி!

18 மாசி 2024 ஞாயிறு 16:56 | பார்வைகள் : 1849


நேற்று சனிக்கிழமை இரவு 8.30 மணி அளவில் Condé-sur-Vesgre (Yvelines) நகரில் இடம்பெற்ற வீதி விபத்தில் 18 வயதுடைய இளைஞன் உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

D936 வீதியில் பயணித்த மகிழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 18 வயதுடைய இளைஞன் மற்றும் 50 வயதுடைய நபர் ஒருவர் என இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 18 வயதுடைய இளம் பெண் ஒருவரும் 10 வயதுடைய சிறுமி ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் அவர்களில் இளம் பெண்ணை Percy இராணுவ மருத்துவமனையிலும் சிறுமையை பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Necker மருத்துவமனையிலும் அனுமதிகப்பட்டனர்.

விபத்து தொடர்பான முழுமையான விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்