80களின் வயதுகளிலுள்ள மூதாட்டி மீது பாலியல் வல்லுறவு - திருடனின் கைவரிசை!!

18 மாசி 2024 ஞாயிறு 17:05 | பார்வைகள் : 8085
மார்செய் நகரின் புறநகரப் பகுதியான La Penne-sur-Huveaune (Bouches-du-Rhône) இ ல் மோசமான குற்றச் செயல் ஒன்று நேற்று நடந்துள்ளது.
இங்கு வசித்து வரும் 80களின் வயதிலுள்ள ஒரு மூதாட்டி, தவறுதலாக தனது கதவை பூட்டாமல் விட்டிருந்துள்ளார். இதனை அவதானித்த திருடன் ஒருவன் உள்ளே புகுந்து, அந்த மூதாட்டயை மிரட்டி பணத்தை எங்கே மறைத்து வைத்துள்ளாய் எனத் தாக்கியுள்ளான்.
எதுவும் கிடைக்காமையினால், அந்த மூதாட்டியை பாலியல் வண்புணர்வு செய்து விட்டுத் தப்பியோடி உள்ளான்.
அயல் வீடொன்றில் தஞ்சம் புகுந்த இந்த மூதாட்டி, அங்கிருந்து காவற்துறையினரிற்கு முறைப்பாடு செய்துள்ளார்.
அவர் கூறிய அடையாளங்களின் படி, குற்றவாளியை சிலமணி நேரங்களில் காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவன் மீது இதுபோன்ற பல வழக்குகள் ஏற்கனவே உள்ளன. இதனாலேயே காவற்துறையினரிற்கு அவனை மடக்குவது இலகுவாக அமைந்துள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1