காவற்துறையினர் மீது தாக்குதல் - தாக்குதலாளி சுட்டுக் கொலை!!
18 மாசி 2024 ஞாயிறு 23:15 | பார்வைகள் : 3312
பரிஸ் 19 இல் காவற்துறை மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில், இந்தப் பகுதியில் உள்ள ட்ராம் நிலையம் அருகில் ஒரு நபர், இன்னொரு நபரிடம் புகைப்பதற்காக நெருப்புக் கேட்டுள்ளார். அவரிடம் நெருப்பு இல்லை என்றதும் கோபம் கொண்டு, உடைக்குள் மறைத்து வைத்திருந்த பெரிய இறைச்சி வெட்டும் கத்தியை எடுத்துத் தாக்க முயன்றுள்ளார்.
இதிலிருந்த தப்பிய நபர் உடனடியாக ஒரு RATP அதிகாரியிடம் தெரிவிக்க, அவர் உடனடியாக காவற்துறையினரை அழைத்துள்ளார்.
அங்கு வந்த காவற்துறையினர் இந்த 40 களின் வயதுகளில் உள்ள சூடான் நாட்டவரை ஆயுதத்தைக் கீழே போடும்படி பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் தெரிவித்துள்ளனர்.
ஆனால்,இந்தக் கட்டளையை மறுதலித்து, இவர் கத்தியுடன் காவற்துறையினரைத் தாக்க முயன்றுள்ளார். காவற்துறையினர் முதலில் மின்சாரத் துப்பாக்கியால் ( pistolet à impulsion électrique) தாக்கியும், யும் மீறி வெறியுடன் காவற்துறையினரைத் தாக்க முயல, வேறு வழியின்றி காவற்துறையினர் இவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்துள்ளனர்.
உடனடியாக அவசர முதலுதவிப்படையினர் அழைக்கப்பட்டும் சிறிது நேரத்தில் தாக்குதலாளி சாவடைந்துள்ளார்.