Paristamil Navigation Paristamil advert login

உலகின் முதல் மர செயற்கைக்கோள் - ஜப்பான்-அமெரிக்கா கூட்டு முயற்சி

உலகின் முதல் மர செயற்கைக்கோள் - ஜப்பான்-அமெரிக்கா கூட்டு முயற்சி

19 மாசி 2024 திங்கள் 08:48 | பார்வைகள் : 4426


உலகின் முதல் மர செயற்கைக்கோள் (wooden satellite) விரைவில் விண்ணில் ஏவப்பட உள்ளது.

உலகின் முதல் மர செயற்கைக்கோளை விரைவில் விண்ணில் செலுத்த அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் (NASA) ஜப்பான் ஆய்வு நிறுவனமும் (JAXA) முயற்சித்து வருகின்றன.

விண்வெளி பயணத்தை அனைவரும் அணுகும் நோக்கில் இந்த மர செயற்கைக்கோள் ஏவுதல் தயாராகி வருகிறது.

இந்த செயற்கைக்கோளை கியோட்டோ பல்கலைக்கழக (Kyoto University) விஞ்ஞானிகள் சுமிட்டோமோ வனத்துறையுடன் (Sumitomo Forestry) இணைந்து உருவாக்கியுள்ளனர்.

இந்த செயற்கைக்கோள் சிதைந்து படிப்படியாக பூமியுடன் இணையும் தன்மை கொண்டதாக இருப்பதால், இது பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவ முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்